மாவட்ட செய்திகள்

கோபி அருகே வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி- ஆர்.டி.ஓ. பழனிதேவி ஆய்வு + "||" + corona vaccine

கோபி அருகே வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி- ஆர்.டி.ஓ. பழனிதேவி ஆய்வு

கோபி அருகே வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி- ஆர்.டி.ஓ. பழனிதேவி ஆய்வு
கோபி அருகே வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை ஆர்.டி.ஓ. பழனிதேவி ஆய்வு செய்தார்.
கடத்தூர்
கோபி அருகே வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை ஆர்.டி.ஓ. பழனிதேவி ஆய்வு செய்தார்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி போடும் முகாம் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி இருப்பை பொறுத்து பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது. இதனால் தடுப்பூசி போடும் முகாம்களில் பொதுமக்கள் நள்ளிரவில் இருந்தே குவிய தொடங்கினர். பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.இந்தநிலையில் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு தடுப்பூசி வழங்க மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நடவடிக்கை எடுத்தார். 
ஆய்வு
அதன்படி கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட கரட்டடிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூடத்தில் தடுப்பூசி போடும் முகாம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினமே பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. அதன்பிறகு தடுப்பூசி போடும் பணி நேற்று காலை நடந்தது.  இதில் பொதுமக்கள் முக கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியை கடைபிடித்து வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். இந்த பணியை கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தாசில்தார் தியாகராஜன் உடனிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. 93 சதவீத மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
சிவகாசி வட்டாரத்தில் 93 சதவீத மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2. 2,060 பேருக்கு 3-வது தவணை தடுப்பூசி
விருதுநகர் மாவட்டத்தில் 2,060 பேருக்கு 3-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது.
3. ஆஸ்திரியா: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்க லாட்டரி பரிசு அறிவிப்பு..!
ஆஸ்திரியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் லாட்டரி பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
4. 3-வது தவணை கொரோனா தடுப்பூசி முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் 3-வது தவணை கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.
5. தடுப்பூசி செலுத்த விருப்பமில்லாதவர்கள் வீட்டிலேயே இருக்கலாம்: அசாம் முதல்-மந்திரி பேச்சு
தடுப்பூசி செலுத்த விருப்பமில்லாதவர்கள் வீட்டிலேயே இருந்துகொள்ளலாம் என்று அசாம் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.