வங்கியில் பணம் எடுத்துவரச் சொன்ன பெற்றோரிடம் திருடன் வழிப்பறி செய்ததாக ஏமாற்றிய மாணவன் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது அம்பலம்


வங்கியில் பணம் எடுத்துவரச் சொன்ன பெற்றோரிடம் திருடன் வழிப்பறி செய்ததாக ஏமாற்றிய மாணவன் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது அம்பலம்
x
தினத்தந்தி 29 July 2021 2:38 AM IST (Updated: 29 July 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

வங்கியில் பணம் எடுத்துவரச் சொன்ன பெற்றோரிடம் திருடன் வழிப்பறி செய்ததாக ஏமாற்றிய மாணவன், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது அம்பலமானது.

வங்கியில் பணம் எடுத்துவரச் சொன்ன பெற்றோரிடம் திருடன் வழிப்பறி செய்ததாக ஏமாற்றிய மாணவன், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது அம்பலமானது.
கல்லூரி மாணவர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவர். இவரிடம் அவரது தாய், மஞ்சள் விற்பனை செய்த பணம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் அந்தியூரில் உள்ள வங்கி கணக்கில் வந்துள்ளது. வங்கிக்கு சென்று அதை எடுத்துவிட்டு வா என்று கூறி அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் அவர் வங்கிக்கு செல்லவில்லை. சிறிது நேரம் கழித்து கல்லூரி மாணவர் வீட்டுக்கு வந்து தனது தாயிடம், தான் வங்கிக்கு சென்று பணம் எடுத்துக்ெகாண்டு வெளியே வந்தேன். அப்போது அங்கு வந்த ஹெல்மெட் அணிந்த மர்மநபர், என்னிடம் இருந்த பணத்தை பறித்து சென்று விட்டார் என்று கூறினார். பின்னர் இதுபற்றி  அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
வழிப்பறி செய்ததாக கூறி...
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், கல்லூரி மாணவரை வங்கிக்கு அழைத்து சென்று அங்கிருந்த அதிகாரிகள் முன்னிலையில் விசாரணை நடத்தினார். விசாரணையின்போது மாணவர் வங்கியில் இருந்து பணம் எடுக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கல்லூரி மாணவரிடம் நடத்திய விசாரணையின்போது, அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததும், அதை மறைப்பதற்காக தனது தாயிடம் பணத்தை மர்மநபர் வழிப்பறி செய்ததாக பொய் சொன்னதையும் ஒப்புக்கொண்டார்.
பொய்யான தகவலை கொடுத்து போலீசாரையும், பெற்றோரையும் ஏமாற்றிய கல்லூரி மாணவரை போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர்.

Next Story