ஈரோடு மாவட்டத்தில் 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்


ஈரோடு மாவட்டத்தில் 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 29 July 2021 2:44 AM IST (Updated: 29 July 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பவானிசாகர்
மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 66 பேரை பணியிட மாற்றம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி நேற்று உத்தரவிட்டார். அதன்படி ஈரோடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பவானிசாகர் போலீஸ் நிலையத்துக்கும், பவானிசாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஈரோடு மாவட்ட குற்ற பதிவேடுகள் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்துக்கும், சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி ஈரோடு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கும், கோவை மாவட்டத்தில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி சோபியா சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சூரம்பட்டி
கோபி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மணி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நர்மதாதேவி கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், கோவை உக்கரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கும், நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் பங்களாபுதூர் போலீஸ் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஈரோடு மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவுக்கும், நீலகிரி மாவட்டம் நடுவட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கும், பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் நம்பியூர் போலீஸ் நிலையத்துக்கும், நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கும், பங்களாபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் கோபி போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

Next Story