182 இடங்களில் கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் இன்று 182 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் தடுப்பூசி இருப்பு பொறுத்து சுழற்சி முறையில் ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இன்று (வியாழக்கிழமை) மாவட்டத்தில் 182 இடங்களில் மொத்தம் 17 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதில் லக்காபுரம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 300 பேருக்கும், லக்காபுரம் முனிசிபல்நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 400 பேருக்கும், தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 400 பேருக்கும், தொட்டகாஜனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 400 பேருக்கும், சிக்கரசம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 300 பேருக்கும், உத்தண்டியூர் அரசு உயர்நிலை பள்ளிக்கூடத்தில் 400 பேருக்கும், திங்களூர் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 400 பேருக்கும், ஏழூரில் 400 பேருக்கும், டி.என்.பாளையம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 400 பேருக்கும், நல்லகவுண்டன்பாளையம் நடுநிலை பள்ளிக்கூடத்தில் 500 பேருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இதேபோல் மற்ற பகுதிகளிலும் 50 முதல் 300 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
Related Tags :
Next Story