செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வண்டலூர்,
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், வேங்கடமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான எம்.கஜா என்கிற கஜேந்திரன் தலைமையில் அவரது வீட்டு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட விவசாய அணி தலைவர் கண்ணப்பன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கனி என்ற கணேசன், மாவட்ட தொழில் நுட்ப பிரிவு துணை செயலாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும், மாணவர் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்க வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அ.தி.மு.க.வினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடுவாஞ்சேரி
நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூர் அ.தி.மு.க. செயலாளர் எஸ்.டி. பிரசாத் தலைமையில் அவரது வீட்டின் முன்பு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் பேரூராட்சி தலைவரும், மாவட்ட துணை செயலாளருமான சீனிவாசன் கலந்துகொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார். கூடுவாஞ்சேரி அடுத்த ஒரத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், குன்றத்தூர் ஒன்றிய துணை செயலாளருமான கற்பகம் சுந்தர் தலைமையில் அவரது வீட்டின் முன்பு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் என்.டி.சுந்தர், மாவட்ட இளம்பெண்கள் பாசறை தலைவர் என்.டி.எஸ்.சுபாஷ், கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருக்கழுக்குன்றம்
திருக்கழுக்குன்றம் பஜார் வீதி எம்.ஜி.ஆர். சிலையருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு செங்கல்பட்டு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வேலாயுதம், நகர செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன வாசகங்கள் எழுதிய அட்டைகளுடன் கட்சியினர் கலந்து கொண்டனர்.
மதுராந்தகம்
மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் தலைமையில் மதுராந்தகம் நகர அ.தி.மு.க. செயலாளர் ரவி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் தேவி வரலட்சுமி முன்னிலையில் மதுராந்தகம் அ.தி.மு.க. நகர அலுவலகம் முன்பு தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் ரவி, நிர்வாகிகள் சித்தப்பா கிருஷ்ணன், ஆர்.டி.ரங்கநாதன், கார்த்திக், தங்கப்பன், ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் லத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ரஞ்சன் தலைமையில் பவுஞ்சூர் பஜார் வீதியில் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் வீரமுத்து, மாவட்ட நிர்வாகி வீரன், நித்யானந்தம் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மதியழகன், பாரதி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் முதுகரையில் உள்ள அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் சார்பில் மாமண்டூர் அ.தி.மு.க. அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் அப்பாதுரை தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிவசங்கரன் முன்னிலை வகித்தார்.
சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பேரம்பாக்கம் கிருஷ்ணமூர்த்தி, சித்தாமூர் மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் பிரவீன் குமார் ஆகியோர் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அச்சரப்பாக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விவேகானந்தன் தலைமையிலும், தெற்கு ஒன்றியம் சார்பில் அ.தி.மு.க. மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆறுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இடைக்கழிநாடு பேருராட்சி வேம்பனூரில் அ.தி.மு.க. நகர செயலாளர் ஆறுமுகம் தலைமையிலும், அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் அ.தி.மு.க நகர செயலாளர் முருகதாஸ் தலைமையிலும் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரே காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
குன்றத்தூர்
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் எழிச்சூர் ஊராட்சியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் எழிச்சூர் பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு குன்றத்தூர் ஒன்றிய முன்னாள் அ.தி.மு.க. செயலாளரும் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாருமான எழிச்சூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் பதாகைகள் ஏந்தியவாறு தி.மு.க. அரசை கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படப்பை பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மாரி தலைமை தாங்கினார்.
காவனூர் ஊராட்சியில் தி.மு.க. அரசை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாலாஜாபாத்
வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே உத்திரமேரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும் அ.தி.மு.க. அமைப்புச்செயலாளருமான வாலாஜாபாத் பா. கணேசன், வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய செயலாளர் க.அக்ரி நாகராஜன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் வாலாஜாபாத் பேரூராட்சி செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் மார்க்கெட் ஹரிகுமார், வெள்ளேரியான் கவுன்சிலர்கள் மோகன், கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story