மரக்கிளையை வெட்டியவருக்கு அடி-உதை; தந்தை மகன் கைது


மரக்கிளையை வெட்டியவருக்கு அடி-உதை; தந்தை மகன் கைது
x
தினத்தந்தி 29 July 2021 11:36 AM IST (Updated: 29 July 2021 11:36 AM IST)
t-max-icont-min-icon

மரக்கிளையை வெட்டியவருக்கு அடி-உதை; தந்தை மகன் கைது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (வயது 37). இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் அப்பகுதியில் உள்ள மாந்தோப்பில் மரக்கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சம்பத் (56), மற்றும் அவரது மகன் மணிகண்டன் (28) உறவினரான பார்த்திபன் ஆகிய 3 பேரும் மரக்கிளையை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து பாண்டுரங்கனை அடித்து உதைத்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில் காயமடைந்த அவர், திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து பாண்டுரங்கன் மணவாள நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து சம்பத், மணிகண்டன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய பார்த்திபனை தேடி வருகின்றனர்.

Next Story