ராமநாதபுரம்,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மொட்டனூத்து பகுதியை சேர்ந்தவர் கணேசன் என்பவரின் மகன் முனீஸ்வரன் (வயது30). இவர் ராமநாதபுரம் அண்ணாநகரில் தங்கியிருந்து முறுக்கு கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது மனைவி வினிதா (24), 6 மாத குழந்தை நிதிஷா ஆகியோருடன் சொந்த ஊரான கம்பத்திற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். ராமநாதபுரம் அருகே லாந்தை கருங்குளம் பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி ரோட்டின் அருகில் இருந்த சிறிய பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தாய்,தந்தை, குழந்தை ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.தாய் தந்தை இருவரும் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.