டெய்லர் பலி


டெய்லர் பலி
x

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் டெய்லர் பலியானார்.

சோழவந்தான், 
சோழவந்தான் பொய்கை விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பாண்டியராஜன் (வயது39). இவர் மதுரையில் டெய்லர் வேலை பார்த்து வந்தார்.  இவர் வந்த மோட்டார் சைக்கிளும் தென்கரை கிராமத்தைச் சேர்ந்த மாயழகு (37) வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதியது. இதில் படுகாயமடைந்த பாண்டியராஜன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை உயிரிழந்தார்.இதுகுறித்து சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்.

Next Story