அ.தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு
அ.தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பேரையூர்,
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோவில் முன்பு தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலா ளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு தலைமை தாங்கினார்.கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளநிலையில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததாக கிராம நிர்வாக அலுவலர் ராஜா டி. கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்பட 40 பேர் மீது டி. கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் நாகையாபுரம் பஸ் ஸ்டாப் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த 43 அ.தி.மு.க.வினர் மீது நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்திபட்டியில் ஆர்ப்பாட்டம் செய்ததாக 10 அ.தி.மு.க.வினர் மீது சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெருங்காமநல்லூரில் ஆர்ப்பாட்டம் செய்ததாக 11 அ.தி.மு.க.வினர் மீதும், சேடபட்டியில் ஆர்ப்பாட்டம் செய்ததாக 11 பேர் மீது சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story