மாவட்ட செய்திகள்

வாலிபர் கைது + "||" + Attacking the farmer Valipar arrested

வாலிபர் கைது

வாலிபர் கைது
பழனியை அருகே விவசாயியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பழனி: 

பழனியை அடுத்த பொன்னாபுரத்தை சேர்ந்தவர் காளிச்சாமி (வயது 55). விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் நிலம் உள்ளது. நேற்று பொன்னாபுரத்தை சேர்ந்த தினேஷ் (25), ஏசுராஜா (29) ஆகியோர் காளிச்சாமி நிலத்தின் அருகில் நின்று கொண்டதாக கூறப்படுகிறது. 


அப்போது, அங்கு நிற்கக்கூடாது என அவர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், ஏசுராஜா ஆகியோர் காளிச்சாமியை தாக்கினர். இதுகுறித்து காளிச்சாமி ஆயக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர். ஏசுராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.