மாவட்ட செய்திகள்

மேலும் 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசி + "||" + And 25 thousand corona vaccine

மேலும் 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசி

மேலும் 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசி
திண்டுக்கல் மாவட்டத்துக்கு மேலும் 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசி வந்தது.
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. இதையொட்டி அதிக அளவில் தடுப்பூசிகள் ஒதுக்கப்படுகின்றன. அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு 24 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. 

இந்த நிலையில் நேற்று மேலும் 25 ஆயிரத்து 800 தடுப்பூசிகள் வந்தன.
இதில் திண்டுக்கல் சுகாதார மாவட்டத்துக்கு 10 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 2 ஆயிரத்து 720 கோவேக்சின் தடுப்பூசிகளும், பழனி சுகாதார மாவட்டத்துக்கு 11 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 2 ஆயிரத்து 80 கோவேக்சின் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டன. இதில் கோவேக்சின் தடுப்பூசியை பொறுத்தவரை 2-வது டோஸ் செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.