டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வாணை பெற்ற கால்நடை டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வாணை பெற்ற கால்நடை டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 July 2021 5:51 AM IST (Updated: 30 July 2021 5:51 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வாணை பெற்ற கால்நடை டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் உடனடியாக பணி நியமனம் வழங்க கோரிக்கை.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2019-ம் ஆண்டு 1,141 கால்நடை உதவி டாக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் தேர்வானவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு, தேர்வாணையும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இடையில் இதுதொடர்பாக கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கால் இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாமல் இருக்கிறது.

இதையடுத்து டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வாணை பெற்ற கால்நடை டாக்டர்கள், உடனடியாக பணி நியமனம் செய்யக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story