வாலாஜாபாத் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
வாலாஜாபாத் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் காஞ்சீபுரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையிலான போலீசார் வாலாஜாபாத்- செங்கல்பட்டு சாலையில் திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது வாலாஜாபாத் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் அதிக அளவு ரேஷன் அரிசியை கொண்டு வந்தவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் வாலாஜாபாத் அடுத்த பாலூரை சேர்ந்த சரவணன் என்பதும் கிராமப்புறங்களில் ரேஷன் அரிசியை வாங்கி கடத்தி சென்று பாலூர் பகுதியில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்று வருவதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சரவணனை கைது செய்து அவருடைய வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story