மாவட்ட செய்திகள்

படப்பை அருகே லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு + "||" + The truck overturned near Padappai and caused an accident

படப்பை அருகே லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு

படப்பை அருகே லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு
படப்பை அருகே லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு.
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் நேற்று காஞ்சீபுரம் பகுதியில் இருந்து எம். சேண்ட் ஏற்றிக்கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை சிவா (வயது 45) ஒட்டி வந்தார். லாரி படப்பை பகுதியில் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் சக்கரங்கள் தனியாக கழன்று ஓடியது. லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர் சிவா காயம் அடைந்தார். லாரியில் இருந்த எம்.சேண்ட் சாலையில் சிதறியது.


இது குறித்து தகவல் அறிந்த மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். பின்னர் சாலையில் கொட்டிய எம்.சேண்டை அப்புறப்படுத்தி லாரியை கிரேன் மூலம் அகற்றினர். இந்த விபத்து காரணமாக வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 1,693 பேருக்கு கொரோனா: 24 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு
தமிழகத்தில் 1,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் 24 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.
2. மேற்கு வங்காளத்தில் கூடுதலாக 70 குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு
மேற்கு வங்காளத்தில் கூடுதலாக 70 குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 120 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 120 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
4. தினசரி கொரோனா பாதிப்பு 38 ஆயிரமாக உயர்வு 369 பேர் பலி
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38 ஆயிரமாக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் நேற்று 369 பேர் பலியாகினர்.
5. சீனாவில் வறட்சி நிலை; 15 லட்சம் மக்கள் பாதிப்பு
சீனாவில் ஏற்பட்டு உள்ள வறட்சி நிலையால் 15 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.