கல்பாக்கம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
கல்பாக்கம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கல்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரம்யா (வயது 22). இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த ரம்யா வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
சாவு
உடனடியாக ராஜேஷ், ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகி 2 ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story