கோவில் பூசாரி வெட்டி கொலை
திருமங்கலம் அருகே கோவில் பூசாரி வெட்டி கொலை செய்யப்பட்டார்
திருமங்கலம்
திருமங்கலம் அருகே கோவில் பூசாரி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கோவில் பூசாரி
மதுரை திருமங்கலம் சிந்துபட்டி அருகே உள்ள தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து வைரன் (வயது 43). கோவில் பூசாரி. இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். முதல் மனைவி இறந்து விட்டதால் 2-வது திருமணம் செய்து கொண்டார். 2-வது மனைவி உமா மகேஸ்வரி. இவருடைய மூத்த மகள் அபி.
இவருக்கும் ஒத்தக்கடையை சேர்ந்த வினோத் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஒரு மாதத்தில் அபி, கருத்து வேறுபாடு காரணமாக வினோத்தை பிரிந்து வந்து விட்டார். இந்த நிலையில் வினோத் ஒத்தக்கடையில் தற்கொலை செய்து கொண்டார்.
மது வாங்க சென்றார்
இந்தநிலையில் நேற்று இரவு முத்துவைரன் பன்னிக்குண்டு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்றார். அங்கு மதுவாங்கி விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார்.
டாஸ்மாக் கடையில் இருந்து சிறிதுதூரம் சென்றபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் முத்துவைரனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதைதொடர்ந்து முத்துவைரன், இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு தப்பியோடினார்.
வெட்டிக்கொலை
ஆனால் மர்ம நபர்கள் அவரை தொடர்ந்து ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் முத்து வைரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிந்துபட்டி போலீசார், முத்துவைரவன் உடலை கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் கோவில் பூசாரியை கொலை செய்த நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story