மாவட்ட செய்திகள்

தச்சூர் முதல் சித்தூர் வரை 133 கிலோ மீட்டரில் மத்திய அரசு திட்டம்: 6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் + "||" + Central government project on 133 km from Thachur to Chittoor: Farmers protest against construction of 6 lanes

தச்சூர் முதல் சித்தூர் வரை 133 கிலோ மீட்டரில் மத்திய அரசு திட்டம்: 6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தச்சூர் முதல் சித்தூர் வரை 133 கிலோ மீட்டரில் மத்திய அரசு திட்டம்: 6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் தச்சூர் முதல் சித்தூர் வரையிலான 6 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
6 வழிச்சாலை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டுச்சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 133 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3 ஆயிரத்து 200 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.இந்த சாலை தச்சூர் கூட்டுச்சாலை, கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பருத்திமேனிகுப்பம், தொளவெடு, பனப்பாக்கம், சென்னங்காரனை, பாலவாக்கம், பேரன்டூர், போந்தவாக்கம், வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது.இந்த சாலையை அமைப்பதற்காக ஆந்திராவில் 2,186 ஏக்கர் 
நிலங்களும், தமிழ்நாட்டில் 889 ஏக்கர் நிலங்களும் கையகப்படுத்தப்படவுள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 44 கி.மீ தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

இந்த சாலையை அமைத்தால் வருடத்துக்கு மூன்று போகங்கள் விளைவிக்கக்கூடிய 500 ஏக்கர் விளைநிலங்கள், பல வீடுகள், கோவில்கள், அரசு பள்ளி கட்டிடங்கள் பாதிப்படையும் என்று தெரிகிறது. குறிப்பாக தொழவேடு, சென்னங்காரனை, பணப்பாக்கம், பேரண்டூர், போந்தவாக்கம் போன்ற பகுதிகளில் மூன்று போகங்கள் விளையக்கூடிய சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள விவசாய நிலம் பாதிப்படையும்.

விவசாயிகளுக்கு நோட்டீசு
இந்நிலையில் மேற்கூறப்பட்ட கிராம பொதுமக்கள், விவசாயிகள் 6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் பல தொடர் போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில் 6 வழிச்சாலை அமையவுள்ள வழித்தடத்தில் நிலம் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கிரையப் பத்திர நகல், மூல பத்திர நகல், கம்ப்யூட்டர் சிட்டா மற்றும் இதர ஆவணங்கள் உடைய நகல்களை ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் கொண்டு வந்தால் நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை செய்யப்படும் என்று நஷ்ட ஈடு மதிப்பீடு குழு விவசாயிகளுக்கு நோட்டீசு 
அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில் மேற்கூறப்பட்ட 12 கிராம பொதுமக்கள், விவசாயிகள் நேற்று காலை ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் வந்தடைந்தனர். அப்போது நிலஎடுப்பு மாவட்ட வருவாய் அதிகாரி உரிய நேரத்திற்கு வராமல் விவசாயிகளை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

முற்றுகை போராட்டம்
அதைக்கண்டித்தும், ஆறுவழிச்சாலை திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வலியுறுத்தியும் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் எதிரில் பொதுமக்களும், விவசாயிகளும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அப்போது அவர்கள் வேண்டாம்... வேண்டாம்... 6 வழிச்சாலை எங்கள் கிராமங்கள் வழியாக வேண்டாம் என்றும், மாற்று வழியில் 6 வழிச்சாலை அமைக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தாலுகா அலுவலகம் முற்றுகையிட்ட தகவல் தெரிந்தவுடன் உயர் அதிகாரிகள் யாரும் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் வரவில்லை. இதனால் அங்கிருந்த இரண்டாம் தர அதிகாரிகள் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் விவசாயிகள் நாங்கள் 6 வழிச்சாலை அமைக்க நிலங்கள் 
கொடுக்க மாட்டோம் என்று அதிகாரிகளிடம் திட்டவட்டமாக தெரிவித்தனர்.