விஷம் குடித்து நர்ஸ் தற்கொலை
விஷம் குடித்து நர்ஸ் தற்கொலை
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படை கிராமத்தை சேர்ந்தவர் சடையாண்டி. இவருடைய மகள் சிவரஞ்சனி(வயது 19). இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். செங்கப்படையிலிருந்து திருமங்கலத்திற்கு தினமும் பேருந்தில் வேலைக்கு சென்று வந்தார். இது சிரமமாக இருப்பதாக கூறி திருமங்கலத்தில் தனது தோழிகளுடன் சேர்ந்து அறை எடுத்து தங்க வேண்டும் என பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார். இதற்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். விரக்தியடைந்த சிவரஞ்சனி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சையில் இருந்த சிவரஞ்சனி பலனின்றி இறந்தார். திருமங்கலம் தாலுகா போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story