மாவட்ட செய்திகள்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் 4 பேர் மறுவாழ்வு பெற்றனர் + "||" + 4 rehabilitated by donating body parts of the brain dead person

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் 4 பேர் மறுவாழ்வு பெற்றனர்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் 4 பேர் மறுவாழ்வு பெற்றனர்
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் 4 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
சென்னை,

விழுப்புரத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 51). மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் விழுப்புரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மனோகரன் அழைத்துவரப்பட்டார். அங்கு, மூளை மற்றும் நரம்புகள் தொடர்பான தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் மனோகரன் மூளைச்சாவு அடைந்தார். அவருடைய மனைவி கிரிஜா உள்பட குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர்.


கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவை சிம்ஸ் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்த 2 நோயாளிகளுக்கு பொறுத்தப்பட்டன. இருதயமும், நுரையீரலும் சென்னையில் பிற ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பொருத்துவதற்காக அனுப்பப்பட்டன. மனோகரனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 4 பேர் மறுவாழ்வு பெற்றிருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் ஹெலிகாப்டர் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது
விபத்தில் மூளைச்சாவு அடைந்த ராசிபுரம் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. அவரது இதயம், நுரையீரல் தனி ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.