போலீசார் வார விடுமுறை அறிவிப்புக்கு சரத்குமார் வரவேற்பு


போலீசார் வார விடுமுறை அறிவிப்புக்கு சரத்குமார் வரவேற்பு
x
தினத்தந்தி 1 Aug 2021 5:39 PM IST (Updated: 1 Aug 2021 5:39 PM IST)
t-max-icont-min-icon

போலீசார் வார விடுமுறை அறிவிப்புக்கு சரத்குமார் வரவேற்பு.

சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போலீஸ்துறை வரலாற்றில் முதன்முறையாக போலீசாருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என்றும், விடுமுறை எடுக்காமல் பணியாற்றுபவர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்கப்படும் என்றும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனுப்பி உள்ள சுற்றறிக்கை மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.

தினந்தோறும் குற்றவாளிகளுடன் பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளையும், சவால்களையும் எதிர்கொள்ளும் போலீஸ்துறையினருக்கு அவர்களது பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் விடுமுறை வழங்கிட டி.ஜி.பி. உத்தரவிட்டிருப்பது அவர்கள் மேலும் உற்சாகமாக பணி செய்வதை ஊக்குவிக்கும். போலீஸ்துறையினருக்கு பெரும் நன்மை உண்டாகக் கூடிய வகையில் இத்தகைய ஆணை பிறப்பித்த தமிழக அரசுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story