போலீசாருக்கு வார விடுமுறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுக்கு விஜயகாந்த் பாராட்டு


போலீசாருக்கு வார விடுமுறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுக்கு விஜயகாந்த் பாராட்டு
x
தினத்தந்தி 1 Aug 2021 7:48 PM IST (Updated: 1 Aug 2021 7:48 PM IST)
t-max-icont-min-icon

போலீசாருக்கு வார விடுமுறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுக்கு விஜயகாந்த் பாராட்டு.

சென்னை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக போலீஸ்துறையில் பணியாற்றும் போலீசார் விடுமுறை இன்றி பணியாற்றுவதால் அவர்கள் மனவேதனையும், மன சோர்வும் அடைந்தனர். பலர் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனால் வார விடுமுறை வழங்க வேண்டும் என்று நீண்ட ஆண்டுகளாக அவர்கள் விடுத்து வந்த கோரிக்கையை ஏற்று, வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்கப்படும் என அறிவித்திருப்பது போலீசாருக்கு இனிய செய்தி ஆகும். மேலும் பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களிலும் போலீசாருக்கு விடுமுறை அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.

போலீசாருக்கு விடுமுறை அறிவித்த டி.ஜி.பி. சைலேந்திரபாபுக்கும், தமிழக அரசுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story