கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை


கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Aug 2021 1:29 AM IST (Updated: 2 Aug 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை

அலங்காநல்லூர்
பாலமேடு பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகள், பொது இடங்கள் மற்றும் வணிக வளாக மையங்கள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வியாபாரிகளிடம், முககவசம் அணிவதின் அவசியம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர். கொரோனா சம்மந்தமாக விழிப்புணர்வு பேனர்கள், ஸ்டிக்கர்கள் பேரூராட்சி பணியாளர்கள் வழங்கி, தேவையான பகுதிகளில் ஒட்டப்பட்டது. மேலும் பேரூராட்சி செயல் அலுவலர் தேவி, மேற்பார்வையில் பணியாளர்கள், காவல்துறையினர் மூலம் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
திருமங்கலம் அருகே ஆ.கொக்குளம் ஊராட்சியில் தலைவர் நர்மதா கபி.காசிமாயன் உத்தரவின் பேரில் ஆட்டோ மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.  கிண்ணிமங்கலம் ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கொரோனா 3-வது அலை வராமல் தடுக்க கிராமங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக வாகனங்கள் மூலம் உசிலம்பட்டியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரத்தை உசிலம்பட்டி ஒன்றிய தலைவர் ரஞ்சனி சுதந்திரம் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஒன்றிய துணைத் தலைவர் மலேசியா பாண்டி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுதந்திரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் மதுரை ஒத்தக்கடையில் பாரம்பரியமிக்க பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆடி பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

Next Story