நகராட்சிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றிய அதிகாரிகள் அதிரடி மாற்றம்


நகராட்சிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றிய அதிகாரிகள் அதிரடி மாற்றம்
x
தினத்தந்தி 2 Aug 2021 3:45 PM IST (Updated: 2 Aug 2021 3:45 PM IST)
t-max-icont-min-icon

நகராட்சிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றிய அதிகாரிகள் அதிரடி மாற்றம்.

தாம்பரம்,

தமிழகம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சிகளில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரிகள் சிலர் பணியாற்றி வருவதால் பல முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுக்க அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார்.

இதையடுத்து சென்னையை சுற்றியுள்ள தாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், மறைமலை நகர், திருவேற்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட நகராட்சிகளில் பணியாற்றி வந்த நகரமைப்பு அலுவலர்கள், நகரமைப்பு ஆய்வாளர்கள், நகராட்சி என்ஜினீயர்கள், நகராட்சி உதவி என்ஜினீயர்கள் என 112 பேரை அதிரடியாக மாற்றம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டு உள்ளார்.

இதில் சென்னையில் பணியாற்றிய பலரும் தென்மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி தாம்பரம் நகராட்சி நகரமைப்பு அலுவலர் சிவகுமார், கரூர் நகராட்சிக்கு மாற்றப்பட்டு உள்ளார். கரூர் நகராட்சியில் பணியாற்றிய அன்பு தாம்பரம் நகராட்சி நகரமைப்பு அலுவலராகவும், கும்பகோணம் நகராட்சி நகரமைப்பு அலுவலர் பாஸ்கரன், பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு அலுவலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story