மாவட்ட செய்திகள்

விபத்தில் வாலிபர் பலி + "||" + Accident

விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி
திருப்புவனம் அருகே நடந்த விபத்தில் வாலிபர் பலியானார்.
மானாமதுரை,

திருப்புவனம் அருகே கழுகர் கடையை சேர்ந்தவர் ஹக்கீம்(வயது 24). இவர் மதுரையில் ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். மணலூர் அருகே வந்த போது சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.தொடர்புடைய செய்திகள்

1. கார் மோதியதில் கொத்தனார் சாவு
மதுரையில் கார் மோதியதில் கொத்தனார் இறந்தார்.
2. விபத்து
லாரி மோதி மீன் வியாபாரி பலியானார்.
3. விபத்து
கார் மோதி கட்டிட தொழிலாளி உயிரிழந்தார்.
4. மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
5. கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பில் மோதி விபத்து
குளித்தலை-மணப்பாறை மெயின் ரோட்டில் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது.