மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு


மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 3 Aug 2021 1:53 AM IST (Updated: 3 Aug 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மதுரை,ஆக
மதுரையில் நேற்று புதிதாக 23 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 12 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 540 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 36 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 14 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். 
நேற்றுடன் மதுரையில் 72 ஆயிரத்து 131 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 265 ஆக குறைந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பால் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,145 ஆக உயர்ந்துள்ளது.

Next Story