அம்மாபேட்டையில் கார் மோதி மின்கம்பம் சேதம்; 6 மணி நேரம் மின்தடைமின்தடையால் பொதுமக்கள் அவதி


அம்மாபேட்டையில் கார் மோதி மின்கம்பம் சேதம்; 6 மணி நேரம் மின்தடைமின்தடையால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 3 Aug 2021 2:55 AM IST (Updated: 3 Aug 2021 2:55 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டையில் கார் மோதி மின்கம்பம் சேதம் அடைந்ததில் 6 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அம்மாபேட்டை
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் இருந்து பவானி நோக்கி நேற்று ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த கார் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பழைய தபால் நிலையம் அருகே காலை 7 மணி அளவில் சென்றபோது, மேட்டூர் பவானி மெயின் ரோட்டில் போடப்பட்ட வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரம் அருகே உள்ள மின்கம்பம் மீது பயங்கரமாக மோதியது. இதில் மின்கம்பம் முறிந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சார வினியோகம் தடைப்பட்டது.
உடனே இதுபற்றி மின்சார வாரியத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று உடைந்த மின்கம்பத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. சுமார் 6 மணி நேரத்துக்கு பிறகே மின்வினியோகம் வந்தது. அதன்பிறகே போக்குவரத்து சீரானது. மின்தடையால் அந்த பகுதி பொதுமக்கள் அவதியடைந்தனர்.

Next Story