காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியபோது சினிமா டைரக்டர் வீ்ட்டில் திருட்டு
காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியபோது சினிமா டைரக்டர் வீ்ட்டில் திருட்டு.
பூந்தமல்லி,
சென்னை மதுரவாயல், எம்.எம்.டி.ஏ. காலனி 18-வது தெருவைச் சேர்ந்தவர் மோகன் (வயது 31). சினிமா டைரக்டரான இவர், தனது குடும்பத்தினருடன் வீட்டின் முதல் மாடியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் கதவுகளை திறந்து வைத்துவிட்டு குடும்பத்தினருடன் தூங்கினார்.
நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், மேஜை மீது வைத்திருந்த விலை உயர்ந்த 2 செல்போன்கள் மற்றும் 1 மடிக்கணினி ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர். நேற்று காலையில் எழுந்த மோகன், செல்போன்கள் மற்றும் மடிக்கணினி திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story