பஸ் ஏற நின்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு


பஸ் ஏற நின்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 3 Aug 2021 9:40 PM IST (Updated: 3 Aug 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

மேலூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலூர்,ஆக
மேலூர் அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் ஜனதா (வயது 64). இவர் மேலூர் பஸ் நிலையத்தில் வெள்ளலூருக்கு செல்வதற்காக ஒரு தனியார் பஸ்சில் ஏற முயன்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம பெண் ஒருவர் பஸ்சில் ஏறுவது போல நடித்து ஜனதா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு பஸ்சில் ஏறாமல் தப்பி ஓடிவிட்டார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஜனதா நகை காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து மேலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த தனியார் பஸ்சின் வெளியே பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அந்த திருட்டு பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story