ஆவின் அலுவலர்கள் பணி இடைநீக்கம்
ஆவின் அலுவலர்கள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மதுரை,ஆக
மதுரையில் கடந்த 1-ந்தேதி சில இடங்களில் கெட்டுப் போன ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இது தொடர்பாக துணை மேலாளர் (பண்ணை) சாரதா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சரியான குளிரூட்டல் இல்லாததால் சுமார் 25 ஆயிரம் லிட்டர் பால் கெட்டு போய் இருப்பது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் தரக்கட்டுப்பாட்டு பிரிவு துணை மேலாளர் சுபசெல்வி, டெக்னிக்கல் பிரிவு வசந்தா ஆகிய 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story