கொரோனா பரவலை தடுக்க பவானிசாகர் அணை பொழுதுபோக்கு பூங்கா மூடப்பட்டது- அணை மேல் செல்ல பொதுமக்களை அனுமதிக்கவில்லை

கொரோனா பரவலை தடுக்க பவானிசாகர் அணை பொழுதுபோக்கு பூங்கா மூடப்பட்டது- அணை மேல் செல்ல பொதுமக்களை அனுமதிக்கவில்லை
x
தினத்தந்தி 4 Aug 2021 3:01 AM IST (Updated: 4 Aug 2021 3:01 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நேற்று ஆடி பெருக்கை முன்னிட்டு பவானிசாகர் அணை பொழுதுபோக்கு பூங்கா மூடப்பட்டது. பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை.

பவானிசாகர்
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நேற்று ஆடி பெருக்கை முன்னிட்டு பவானிசாகர் அணை பொழுதுபோக்கு பூங்கா மூடப்பட்டது. பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை.
பொழுதுபோக்கு பூங்கா
பவானிசாகர் அணை முன்பு பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் வண்ண வண்ண பூக்கள், ஊஞ்சல் சருக்கு பாறை உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டுக்கள், செயற்கை நீரூற்று மற்றும் வனவிலங்குகளின் உருவச்சிலைகள் உள்ளிட்டவைகள் உள்ளது.
இந்தப் பூங்காவில் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்வார்கள். ஆடி பெருக்கு தினத்தன்று சாதாரணமாக ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் பவானிசாகர் அணை முன்பு உள்ள பொழுதுபோக்கு பூங்காவிற்கு வருவது வழக்கம். காரணம் ஆடிப்பெருக்கு தினத்தில் மட்டும் சுற்றுலா பயணிகள் மற்றும் அனைத்து பொதுமக்களும் பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
அனுமதிக்கவில்லை
ஆனால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கான நேற்று பவானிசாகர் அணைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு அணை முன்பு உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. பூங்காவிற்கு செல்லும் முதன்மை வழி பூட்டப்பட்டது.
அதேபோல் பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Next Story