வருமான வரி படிவங்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் அதிகாரி தகவல்


வருமான வரி படிவங்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் அதிகாரி தகவல்
x

வருமான வரி படிவங்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் அதிகாரி தகவல்.

சென்னை,

வருமான வரித்துறையில் மின்னணு முறையில் வரி செலுத்துபவர்களின் நலன் கருதி பல்வேறு படிவங்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக காலாண்டு அறிக்கை படிவம் 15 சிசி மற்றும் 2020-2021-ம் நிதியாண்டுக்கான சமநிலை வரி அறிக்கை படிவம் எண்-1 ஆகியவை வருகிற 31-ந் தேதிக்குள் பூர்த்தி செய்து வழங்க கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

அதேபோல், முந்தைய ஆண்டான 2020-2021-ம் ஆண்டிற்கான முதலீட்டு நிதியால் செலுத்தப்பட்ட அல்லது வரவு வைக்கப்படும் வருமான அறிக்கை படிவம் எண்-64 டி மற்றும் 64-சி படிவம் ஆகியவற்றை பூர்த்தி செய்து வழங்க வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் www.incometaxindia.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதள முகவரியிலும் வெளியிடப்பட்டு உள்ளது என்று வருமான வரித்துறை கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Next Story