தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரி தலைமை இயக்குனராக சுனில் மாத்தூர் பொறுப்பு ஏற்பு


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரி தலைமை இயக்குனராக சுனில் மாத்தூர் பொறுப்பு ஏற்பு
x
தினத்தந்தி 4 Aug 2021 7:48 PM IST (Updated: 4 Aug 2021 7:48 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரி தலைமை இயக்குனராக சுனில் மாத்தூர் பொறுப்பு ஏற்பு.

சென்னை,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி தலைமை இயக்குனராக (புலனாய்வு) சுனில் மாத்தூர் பொறுப்பேற்றுள்ளார். இவர் பதவி உயர்வு பெற்று, வாரணாசியில் இருந்து மாறுதலாகி சென்னை வந்துள்ளார். சுனில் மாத்தூர், 1988-ம் ஆண்டு இந்திய வருவாய்பணி அலுவலர்கள் அணியை சேர்ந்தவர். இவர் குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வருமான வரித்துறையின் பல்வேறு அலுவலகங்களில் உயர் பதவிகளை வகித்துள்ளார்.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 2014-15-ம் ஆண்டில் தேசிய சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் லி குவான் யு பொதுக்கொள்கை பள்ளியில் பொது நிர்வாகத்தில் ஓராண்டு முதுநிலைப் படிப்பை முடித்துள்ளார்.

மேற்கண்ட தகவல் சென்னை வருமான வரித்துறையின் கூடுதல் இயக்குனர் (புலனாய்வு) டி.ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story