வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஈரோட்டில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று ஈரோட்டில் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று ஈரோட்டில் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
சிறப்பு பேரவை கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சிறப்பு பேரவை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பத்ரி, மாவட்ட செயலாளர் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காப்பீட்டு நிறுவனம்
இந்தியாவில் 300 பேரின் ஸ்மார்ட் போன்கள் வேவு பார்ப்பதாக பட்டியல் வெளியாகி உள்ளது. இதனை இந்திய அரசு ஒப்புக்கொள்ள மறுத்து, நடவடிக்கை எடுக்க தயங்கி வருகிறது. இது மனித உரிமைக்கும், கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது. நாடாளுமன்றத்தில் தற்போதைய சூழலை மோடி அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. காப்பீட்டு திட்டம் தொடர்பாக ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
அதன்படி 4 பொது காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றை தனியாருக்கு விற்பனை செய்வதாக முடிவு செய்து சட்டத்தை அமல்படுத்தி விட்டனர். ஏற்கனவே தனியார் காப்பீட்டு நிறுவனம் மக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றுகிறார்கள் என்று தான் பொதுத்துறை நிறுவனமாக ஆக்கினார்கள். தற்போது, மீண்டும் பொதுத்துறையை தனியார் துறையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேபோல மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், பகிர்மானம் ஆகியவற்றை தனியார் மயமாக்குவதையும் மத்திய அரசு சட்டமாக இயற்ற முயற்சி செய்து வருகிறது.
வறுமைக்கோடு
பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதார வளர்ச்சி குன்றி வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் ஆய்வின்படி 2019-2020-ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 30 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது 2020-2021-ம் ஆண்டில் பொருளாதார ஜி.டி.பி. 7 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இது மேலும் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்க செய்யும். இதையெல்லாம் கணக்கில் கொண்டு பொருளாதார திட்டத்தை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களையும், பொருளாதாரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
----------------
Related Tags :
Next Story