ஒலிம்பிக் போட்டி வீரர்-வீராங்கனைகளுக்கு வழிகாட்டியாக பணிபுரியும் பெருந்துறையை சேர்ந்த பெண் என்ஜினீயர்


ஒலிம்பிக் போட்டி வீரர்-வீராங்கனைகளுக்கு வழிகாட்டியாக பணிபுரியும் பெருந்துறையை சேர்ந்த பெண் என்ஜினீயர்
x
தினத்தந்தி 4 Aug 2021 10:26 PM IST (Updated: 4 Aug 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

பெருந்துறையை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஒலிம்பிக் போட்டி வீரர்-வீராங்கனைகளுக்கு வழிகாட்டியாக பணிபுரிகிறாா்.

பெருந்துறை-குன்னத்தூர் ரோடு, சக்தி நகரைச் சேர்ந்தவர்கள் மோகன்குமார்- கவிதா  தம்பதி. சாப்ட்வேர் என்ஜினீயராக இவர்கள் 2 பேரும் கடந்த 7 ஆண்டுகளாக, ஜப்பானில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் கவிதா மோகன்குமார் இதற்கு முன்பு மலேசியாவிலும் சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இதனால், கவிதா தமிழ், ஆங்கிலம், இந்தி, மலாய் மற்றும் ஜப்பானிய மொழிகளில் பேசும் திறமை பெற்றவர்.
இதைத்தொடர்ந்து பல மொழிகள் பேசும் கவிதாவை ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டி, ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான வழிகாட்டியாக நியமித்துள்ளது. இதையடுத்து அவர் வீரர், வீராங்கனைகளுக்கு வழிகாட்டியாக பணிபுரிந்து வருகிறார். இதேபோல் ஏராளமானோர் வழிகாட்டியாக பணிபுரிந்து வருகின்றனர் அதில் கவிதாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கும் கவிதாவே வழிகாட்டியாக இருந்து வருகிறார்

Next Story