இளம் வக்கீல்களுக்கு உதவ ரூ.20 லட்சம் நிதி


இளம் வக்கீல்களுக்கு உதவ ரூ.20 லட்சம் நிதி
x
தினத்தந்தி 5 Aug 2021 3:24 PM IST (Updated: 5 Aug 2021 3:24 PM IST)
t-max-icont-min-icon

இளம் வக்கீல்களுக்கு உதவ ரூ.20 லட்சம் நிதி.

சென்னை,

கொரோனா ஊரடங்கினால், சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்குகள் ஆன்-லைன் வாயிலாக விசாரிக்கப்படுகின்றன. இந்த ஊரடங்கினால், இளம் வக்கீல்கள் வருவாய் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு உதவும் விதமாக ‘கொரோனா ஊரடங்கு நிவாரண நிதி' என்ற ஒரு நிதியை வக்கீல் சங்கம் உருவாக்கி உள்ளது.

இந்த நிதிக்கு, சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கம் ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளது. இந்த தொகைக்கான காசோலையை, சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி என்.கிருபாகரனிடம், ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் நேற்று வழங்கினார். அருகில், சங்க நிர்வாகிகள் உள்ளனர்.

Next Story