கஞ்சா விற்ற 8 பேர் கைது


கஞ்சா விற்ற 8 பேர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2021 8:23 PM IST (Updated: 5 Aug 2021 8:23 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போதை பொருள் கடத்தல், விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி வடபாகம் போலீசார், தூத்துக்குடி கந்தசாமிபுரத்தை சேர்ந்த ஜோன்ஸ்ராஜ் மகன் தேவராஜன் என்ற சாம் (வயது 22) என்பவரையும், மத்தியபாகம் போலீசார் சகாயமாதா பட்டினத்தை சேர்ந்த இசக்கிராஜா (37), அண்ணாநகரை சேர்ந்த ராமசாமி மகன் சிவகேசவன் (27) ஆகியோரையும், தாளமுத்துநகர் போலீசார் சோட்டையன்தோப்பை சேர்ந்த சக்திவேல் மகன் மதன்குமார் (19), காளீசுவரன் மகன் சதீஷ் (19) ஆகியோரையும், தென்பாகம் போலீசார் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சங்கர் (42), அவரது மனைவி அந்தோணியம்மாள் (37) ஆகியோரையும், ஆறுமுகநேரி போலீசார் காயல்பட்டினம் வண்டிமலைச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் சின்னத்துரை (34) என்பவரையும் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்தனர்.

கைது செய்யப்ப்டட 8 பேரிடம் இருந்து மொத்தம் 570 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.  இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story