விவசாயிகளுக்கு பயிற்சி
விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள அப்பநேந்தல், கீழக்குளம் ஆகிய கிராமத்தில் ஆர்கானிக் சாகுபடி தொழில்நுட்பங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கான பயிற்சி ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் டாம் பி சைலஸ் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள் ஆர்கானிக் முறையில் சாகுபடி செய்யும்போது பயன்படுத்த வேண்டிய தொழுஉரம், மக்கிய குப்பை, மண்புழு உரம் போன்ற இடுபொருள்கள் மற்றும் அவற்றின் தரம் குறித்து விரிவாக கூறினார். மேலும் விவசாயிகள் அதிக பரப்பில் ஆர்கானிக் முறையில் சாகுபடி செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். வேளாண்மை துணை இயக்குனர் பாஸ்கரமணியன், முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் கேசவராமன், உதவி வேளாண்மை அலுவலர் சுபாசினி மற்றும் வினோத் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story