புதூர்,
மதுரை சிலைமான் புறநகர் பகுதியில் சிலர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், போலீசாருடன் ஜீப்பில் அங்கு சென்றார். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நீலமேகம்(வயது 37), ராம்குமார்(39), அருண்பாண்டி(28), மதுரையை சேர்ந்த செல்வம்(35), சிக்கந்தர்(35) ஆகிய 5 பேர் என தெரிய வந்தது. அவர்களிடம் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதையடுத்து அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டிய போது இவர்கள் போலீசில் பிடிபட்டது விசாரணையில் தெரிய வந்தது.