முன்னாள் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை


முன்னாள் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 6 Aug 2021 1:20 AM IST (Updated: 6 Aug 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

எழுமலை அருகே முன்னாள் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உசிலம்பட்டி,

 எழுமலை அருகே உள்ள திருமாணிக்கத்தை சேர்ந்த ராஜாங்கம் மகன் சின்னச்சாமி (வயது 28). விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர். சம்பவத்தன்று இவரது தாய் கோமதி சேடப்பட்டில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் வீட்டில் இருந்த சின்னச்சாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை வீடு வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் அக்கம், பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்ற போது தூக்கில் சின்னச்சாமி தொங்கி கொண்டு இருந்தார். இது குறித்த புகாரின் பேரில் டி..ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னச்சாமி உடலை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story