நல்லம்பள்ளி அருகே 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


நல்லம்பள்ளி அருகே 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 6 Aug 2021 1:56 AM IST (Updated: 6 Aug 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

நல்லம்பள்ளி, 
நல்லம்பள்ளி அடுத்த மிட்டாரெட்டிஅள்ளி மற்றும் சின்னரெட்டிஅள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள சாலையோரத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை முள்புதர்களில் பதுக்கி வைத்திருப்பதாக, நல்லம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நல்லம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் சத்யபிரியா தலைமையிலான அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை நடத்தினர். அப்போது மிட்டாரெட்டிஅள்ளி மற்றும் சின்னரெட்டிஅள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள சாலையோர முள்புதர்களில் சுமார் 1½ டன் அளவில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் கேட்பாரற்று கிடந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரேஷன் அரிசி மூட்டைகளை முள்புதர்களில் பதுக்கி வைத்த நபர்கள் யார் என்பது குறித்து சம்பந்தப்பட்ட கிராமங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story