மாநகராட்சி, நகரசபை தேர்தலை தள்ளிவைக்க முடியாது; அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனாவை காரணம் காட்டி மாநகராட்சி, நகரசபை தேர்தலை தள்ளிவைக்க முடியாது என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா காரணமாக சில மாநகராட்சிகள், நகரசபைகளின் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. அந்த தேர்தலை நடத்த உத்தரவிடும்படி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு இருப்பதால், மாநகராட்சி மற்றும் நகரசபை தேர்தலை டிசம்பர் மாதம் வரை நடத்த வாய்ப்பில்லை, அந்த தேர்தல்களை தள்ளிப்போட வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அரசின் கோரிக்கையை, ஐகோர்ட்டு நீதிபதி ஏற்க மறுத்து விட்டார். கொரோனா காரணமாக தேர்தலை தள்ளிப்போட முடியாது. மாநிலத்தில் காலியாக உள்ள மாநகராட்சி, நகரசபை தேர்தலை நடத்த உடனடியாக அரசு முன்வர வேண்டும். அத்துடன் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்க வேண்டும். வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Related Tags :
Next Story