கோவையில் திருடிய மோட்டார்சைக்கிளை ஓட்டிவந்த வாலிபர் புஞ்சைபுளியம்பட்டியில் சிக்கினார்- பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்


கோவையில் திருடிய மோட்டார்சைக்கிளை ஓட்டிவந்த வாலிபர் புஞ்சைபுளியம்பட்டியில் சிக்கினார்- பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 6 Aug 2021 2:32 AM IST (Updated: 6 Aug 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் திருடிய மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரை புஞ்சைபுளியம்பட்டியில் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

புஞ்சைபுளியம்பட்டி
கோவையில் திருடிய மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரை புஞ்சைபுளியம்பட்டியில் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 
பெட்ரோல் திருட முயற்சி
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புது ரோட்டில் நேற்று அதிகாலை ஒரு வீட்டு முன்பு இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளோடு நடந்து வந்த வாலிபர் ஒருவர், அந்த இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோல் திருட முயன்றார். இதைப்பார்த்த பொதுமக்கள் அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் இதுபற்றி புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள் அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அந்த நபரிடம் விசாரணை நடத்தினார்கள்.
போலீசில் ஒப்படைப்பு
விசாரணையில் அந்த நபர், சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் சுஜில் கரை பகுதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 23) என்பதும், இவர் கோவை பீளமேடு பகுதியில் மோட்டார்சைக்கிளை திருடிக்கொண்டு ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புதுரோட்டில் சென்றபோது அவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்ததும், இதனால் அங்கு ஒரு வீட்டு் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தில் அவர் பெட்ரோல் திருட முயன்றபோது பொதுமக்களிடம் சிக்கியதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் மகேந்திரனை பிடித்து கோவை மாவட்டகுற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பதற்காக கொண்டு் சென்றனர். 

Next Story