கோபி அருகே பரிதாபம்: விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து சாவு- போலீசார் விசாரணை

கோபி அருகே பரிதாபம்: விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து சாவு- போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 Aug 2021 2:33 AM IST (Updated: 6 Aug 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே வீட்டு் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தான்.

கடத்தூர்
கோபி அருகே வீட்டு் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தான்.
சிறுவன்
கோபி அருகே உள்ள எல்லமடையை சேர்ந்தவர் ராஜா. கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 28). இவர்களுடைய மகன் ஆகாஷ் (6).
இவன் நேற்று முன்தினம் மாலை  வீட்டின் முன்பு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
மயங்கி விழுந்து சாவு
அப்போது திடீரென ஆகாஷ் மயக்கமடைந்து கீழே விழுந்தான். இதைப்பார்த்த செல்லம்மாள் அவனை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, ஆகாஷ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

Next Story