நண்பர்களை தாக்கிய 2 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம், நண்பர்களை தாக்கிய 2 பேர் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 21). இவரது நண்பர் பிரகாஷ் (25). நேற்று முன்தினம் இரவு இருவரும் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் எதிரே சுரங்கபாதை அருகே உள்ள ஒரு டீக்கடையில் தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு டீ குடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமை சேர்ந்த சிலர், தங்களது ஆட்டோவுக்கு இடையூறாக இருப்பதால் மேற்கண்ட மோட்டார் சைக்கிளை அங்கிருந்து வேறு இடத்திற்கு இயக்கி செல்லுமாறு அஜித்குமார் மற்றும் பிரகாஷிடம் வலியுறுத்தினர்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அஜித்குமாரையும் பிரகாசையும் ஆட்டோவில் வந்தவர்கள் சரமாரியாக உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவில் வந்து தாக்குதலில் ஈடுபட்ட கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமை சேர்ந்த கிங்ஸ்டன் (24), வித்யசங்கர் (26) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக முகாமை சேர்ந்த மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story