திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சுற்றி திரிந்த மனநிலை பாதிக்கப்பட்ட ஒடிசா சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு


திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சுற்றி திரிந்த மனநிலை பாதிக்கப்பட்ட ஒடிசா சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 6 Aug 2021 9:41 AM IST (Updated: 6 Aug 2021 9:41 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் ரெயில்வே போலீசார் அந்த சிறுமியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.

திருவள்ளூர், 

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் 17 வயது சிறுமி ரெயிலில் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தார். இதனால் சந்தேகமடைந்த திருவள்ளூர் ரெயில்வே போலீசார் அந்த சிறுமியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து ரெயில்வே போலீசார் பெண் போலீஸ் உதவியுடன் அவரை பத்திரமாக மீட்டு மப்பேடு பகுதியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்க வைத்தனர். போலீஸ் விசாரணையில் அந்த சிறுமி ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் கடந்த 27-ந் தேதியன்று வீட்டை விட்டு வெளியேறி ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்துள்ளார்.

மேலும் அவர் கடந்த 10 நாட்களாக சென்னையில் இருந்து திருவள்ளூர் அரக்கோணம் ரெயில் நிலையங்கள் என மாறி மாறி சுற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் அந்த சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து ஒடிசாவில் இருந்து வந்த அவரது பெற்றோரிடம் சிறுமி பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.


Next Story