செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2021 5:05 AM GMT (Updated: 2021-08-06T10:35:33+05:30)

திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சுகாதார நிலையத்தில் அமைச்சர் தாமோதரன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

திருப்போரூர், 

மக்களை தேடி மருத்துவம் திட்டம் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சுகாதார நிலையத்தில் அமைச்சர் தாமோதரன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். திருப்போரூர் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.பாலாஜி முன்னிலை வகித்தார். சுகாதார துணை இயக்குனர் பிரியா வரவேற்புரை வழங்கினார். கலெக்டர் ராகுல்நாத் கூறுகையில்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

தடுப்பூசி செலுத்துவதில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தமிழக அளவில் செங்கல்பட்டு மாவட்டம் முதல்நிலை மாவட்டமாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story