காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி வரைவு பட்டியல் கலெக்டர் வெளியிட்டார்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி வரைவு பட்டியல் கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 6 Aug 2021 11:05 AM IST (Updated: 6 Aug 2021 11:05 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி வரைவு பட்டியலை கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக, இந்த மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த கிராம ஊராட்சி வார்டு வாரியாக அமைக்கப்பட இருக்கும் 1,292 வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியலை காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டார்.

அதனை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி பெற்றுக்கொண்டார். அப்போது கலெக்டர் ஆர்த்தி கூறியதாவது.

பொதுமக்களின் தகவலுக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), மாவட்ட ஊராட்சி அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

இந்த பட்டியலில் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துருக்கள் ஏதேனும் இருப்பின் நாளை (சனிக்கிழமை)க்குள் அதன் விவரத்தை அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்கான அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களான வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி)களிடம் எழுத்துப்பூர்வமாகவும், நாளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுக்காக நடைபெறும் கூட்டத்திலும் கருத்துகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல் பிரிவு) ஸ்டீபன் ஜெயச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சித்ரா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஸ்ரீதர் மற்றும் தேர்தல் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலர் சிவதினகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story