ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 178 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 178 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 Aug 2021 9:05 PM GMT (Updated: 2021-08-07T02:35:04+05:30)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 178 பேருக்கு கொரோனா ஏற்பட்டு்ள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 161 பேருக்கு தொற்று உறுதியானது. இந்தநிலையில் நேற்று புதிதாக 178 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94 ஆயிரத்து 699 ஆக உயர்ந்தது. இதில் 92 ஆயிரத்து 385 பேர் குணமடைந்து உள்ளார்கள். இதில் நேற்று மட்டும் 144 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். தற்போது 1,677 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மொத்தம் 637 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story