பவானி சங்கமேஸ்வரர், பண்ணாரி அம்மன் கோவில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கியது


பவானி சங்கமேஸ்வரர், பண்ணாரி அம்மன் கோவில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கியது
x
தினத்தந்தி 7 Aug 2021 2:51 AM IST (Updated: 7 Aug 2021 2:51 AM IST)
t-max-icont-min-icon

பவானி சங்கமேஸ்வரர், பண்ணாரி அம்மன் கோவில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கியது.

ஈரோடு
தமிழகத்தில் இந்து அறநிலையத்துக்கு உள்பட்ட கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி நேற்று 47 கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.  இதில் ஈரோடு மாவட்டத்தில் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. கோவில் நிர்வாகத்தின் சார்பில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று கோவில் பிரதோஷத்தை முன்னிட்டு கோவில் குருக்களும், ஈரோடு ஆதீனமுமான பாலாஜி சிவம், உதய பிரகாஷ் ஆகியோர் சங்கமேஸ்வரர் உடனமர் வேதநாயகி அம்மன் சன்னதியிலும், சிவ கணேஷ் சுப்பிரமணியர் சன்னதியிலும், கேசவ பட்டாச்சியார், பிரவீன் ஆகியோர் ஆதிகேசவபெருமாள் உடனமர் ஸ்ரீ தேவி பூதேவி சன்னதியிலும் தமிழில் அர்ச்சனை செய்தனர்.
இதேபோல் சத்தியமங்கலத்தை அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலிலும் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக பக்தர்கள் எவரும் கோவிலுக்கு வரவில்லை.
இதனால் நேற்று யாருக்கும் தமிழில் அர்ச்சனை ெசய்யவில்லை என கோவில் அலுவலர்கள் தெரிவித்தார்கள்.

Next Story