ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசியின் அளவை பொறுத்து பல்வேறு இடங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு போடப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி போடும் பணி நடந்தது. சிவகிரி, மொடக்குறிச்சி, சென்னிமலை, தாளவாடி, ஜம்பை, சித்தோடு, திங்களூர், நம்பியூர், டி.என்.பாளையம், புஞ்சைபுளியம்பட்டி, அத்தாணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட காந்திஜி ரோடு, நேதாஜி ரோடு, ராஜாஜிபுரம், கருங்கல்பாளையம், சூரம்பட்டி உள்பட 10 நகர்புற சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் நடந்தன. எனவே ஈரோடு மாவட்டத்தில் 76 இடங்களில் மொத்தம் 10 ஆயிரத்து 50 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
Related Tags :
Next Story